https://www.instagram.com/reel/CSOciy-KjpU/?utm_source=ig_web_copy_link
ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிட்னஸ் டிரெய்னர் மற்றும்
மாடல் அழகியான மிஷா சர்மா என்னும் இளம்பெண்
தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ
அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஜீன்ஸ் பேன்ட் உடுத்தி அதன்மீது சேலை அணிந்து வந்த
மிஷா சர்மா ஓடிவந்து ஜிம்னாஸ்டிக் வீராங்கனைபோல்
உடலை வில்லாக வளைத்துப் பின்புறமாக டைவ் அடிக்கிறார்….
தொடர்ந்து இரண்டு முறை டைவ் அடிக்கும் அந்தப் பெண்ணின்
செயலை ஆச்சரியமுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் அங்கிருக்கும் ஆண்கள்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர்
இளம்பெண்ணின் ஜிம்னாஸ்டிக் செயலைப் பார்த்துப்
பாராட்டியுள்ளதுடன், ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பாமல்
விட்டுவிட்டீர்களே…. அனுப்பியிருந்தால் தங்கப் பதக்கம்
நிச்சயம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாடல் அழகியின் ட்விட்டர் கணக்கை இரண்டரை லட்சம்பேர்
பின்தொடர்கின்றனர். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக
வைத்துக்கொள்ள இவர் போன்ற உடற்பயிற்சி வல்லுநர்கள்
வழிகாட்டுவது சமூகத்துக்கு நல்லது.
திறமையும் வாய்ப்பும் கிடைத்தால் ஜொலிப்பது உறுதிதானே…