உலகிலேயே உயரமான மொபைல் டிஜிட்டல் திரையரங்கம் எங்கு இருக்கிறது தெரியுமா?

339
Advertisement

உலகிலேயே மிக உயரமான டிஜிட்டல் தியேட்டரைக் கட்டி
இந்திய ராணுவம் மகத்தான சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் தலைப்பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள
லடாக்கில் லேவின்பல்டான் என்னும் பகுதியில் இந்த மொபைல்
டிஜிட்டல் தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.

11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

குறைந்த கட்டணத்தில் பல வசதிகளுடன் இந்த தியேட்டரில்
படம் பார்த்து மகிழலாம் என்கிறார் நாடகக் கலைஞரான மெபாஃம் ஒட்சல்.

இதுபோன்று இன்னும் நான்கு தியேட்டர்கள் இப்பகுதியில் கட்டப்பட
உள்ளதாக இந்த மொபைல் தியேட்டரின் ஒருங்கிணைப்பாளர் சுஷில் கூறுகிறார்.

இந்தத் தியேட்டரில் முதலில் லடாக் பகுதியில் வாழும் சாங்பா
என்னும் நாடோடிகளைப் பற்றிய செகூல் என்னும் திரைப்படம்
திரையிடப்பட்டது-

பின்னர், பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாரின்
பெல்பாட்டம் என்னும் படம் இராணுவ வீரர்களுக்காகத் திரையிடப்பட்டது.