2 நாட்களில் 18 பேரைத் தாக்கிய அணில்

283
Advertisement

2 நாட்களில் 18 பேரைத் தாக்கிய அணிலின் செயல்கள் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது.

யுனைட்டெட் கிங்டத்தின் வடக்கு வேல்ஸ் நாட்டில் பக்லி என்னும் இடத்தில் உள்ள வெல்ஸ் கிராமத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக, அணில்கள் பஞ்சுபோன்று மென்மையானவையாகக் கருதப்படுகிறது. ஆனால், சாம்பல் நிற வகையைச் சேர்ந்த ஸ்ட்ரைப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அணில் Gremlins ஆங்கிலத் திரைப்படத்தில் வருவதுபோன்று 18 நபர்களைத் துரத்தித் துரத்திக் கடித்துத் தாக்கியுள்ளது.

Advertisement

தாக்குதலுக்குள்ளானவர்கள் டெட்டனஸ் ஊசி செலுத்திக்கொண்டனர் என்றால், தாக்குதலின் கொடூரத்தைப் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அத்துடன், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தங்களின் பாதிப்பைப் புகைப்படம் எடுத்து வலைத்தளங்களில் பதிவிட, அது வைரலானது.

அந்த அணில் மனிதர்களை மட்டுமன்றி, நாய்கள், பூனைகளையும் தாக்கியுள்ளது.
இதனால், யாரை, எப்போது, எப்படித் தாக்கும் என்று கணிக்கமுடியாத வகையில், கொரில்லாத் தாக்குதல் நடத்துவதுபோல திடீர் திடீரென்று தாக்கத் தொடங்கிய அணிலை நினைத்து அனைவரும் பயத்தில் உறைந்தனர்.

அணிலின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் தவித்த நிலையில், 65 வயது கோரின் ரெனால்ட்ஸ் என்னும் பாட்டி ஒருவர் விரித்த வலையில் கொடூர அணில் சிக்கிக்கொண்டது.

இந்தப் பாட்டித் தனது தோட்டத்தில் அணிலுக்குப் பிடித்தமான வேர்க்கடலை மற்றும் சில தின்பண்டங்களைக் கூண்டில் வைத்துவிட்டு, தனது 2 வயது பேரனுடன் அங்கு விளையாடிக்கொண்டிருந்தார்.

அதனைப் பார்த்த ஸ்ட்ரைப் தேங்காய்த் துண்டுக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கும் எலிபோல் சிக்கிக்கொண்டது. தந்திரமாக அந்தக் கொடூர அணிலைப் பிடித்துவிட்டார் கோரின் பாட்டி.

அந்தக் கொடூர அணிலுக்குத் தண்டனை என்ன தெரியுமா?

கருணைக் கொலையாம்.

வேல்ஸ் நாட்டின் சட்டப்படி சாம்பல் நிற அணிலைக் காட்டில் விடக்கூடாதாம்.