கோழியைக் கண்டு பயந்தோடிய பாம்பு

256
Advertisement

பாம்பைத் துரத்தியடித்த கோழி பற்றிய வீடியோ சமூக
வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாம்புக்கும் கோழிக்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும்?
பாம்புதான் என்போம் பொதுவாக. ஆனால், இந்த வீடியோ
கோழிதான் ஜெயிக்கும் என்கிறது.

நம்முடையக் கிராமப்புறங்களிலும் இதுபோன்ற சம்பவங்களை
நேரில் பார்த்திருப்போம். இந்த நிகழ்வு ஜார்ஜியா நாட்டில் நடந்துள்ளது.

ஒரு கோழிப் பண்ணைக்குள் புகுந்து முட்டைகளைக்
தின்னலாம் என்ற கனவோடு கூட்டுக்குள் சுருண்டு கிடக்கிறது
கரிய நிறப் பாம்பு. அதைக்கண்ட பெண்மணி ஒரு சிறிய
மரக்கிளையால் கீழே தட்டிவிடுகிறார்.

அதேசமயம் பாம்பைப் பார்த்துவிட்ட கோழி ஒன்று
ஆவேசமாகச் சென்று அதைக் கொத்த முயல்கிறது. இந்த திடீர்
தாக்குதலை எதிர்பாராத பாம்பும் கோழியை எதிர்க்காமல்
தப்பித்தால் போதும் என்கிற நிலையில் விரைவாக ஊர்ந்துசெல்கிறது.

அப்போது அங்கு வந்த நாய் பாம்பு அருகே சென்று திரும்பி விடுகிறது.
பாம்பு என்றதும் படையே நடுங்கும். ஆனால், கோழி ஒன்று
தன்னந்தனியாகப் பாம்பைக் கொத்திக் கொத்தி துரத்த,
பயத்தில் பாம்பு சர்ரென ஊர்ந்துசென்று மறைந்துவிடுகிறது.

யாராக இருந்தாலும் தைரியம் வேண்டும் என்பதை உணர்த்துகிறது
கோழியின் செயல்.