நடுக்கடலில் படகை மறித்த பாம்பு

161
Advertisement

https://www.instagram.com/reel/CTN1190hwQZ/?utm_source=ig_web_copy_link

படகை மறிப்பதுபோல வந்த கடல் பாம்பு பற்றிய
வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நீலக்கடலில் மீன்பிடிப்பதற்காக புரோடி மோஸ் என்னும்
மீனவர் துடுப்புப் படகில் சென்றுள்ளார். அவர் நடுக்கடலில்
சென்றுகொண்டிருந்தபோது படகை மறிப்பதுபோல எதிரே
ஆவேசமாக வருகிறது 20 அடி நீளமுள்ள கடல்பாம்பு.

Advertisement

புரோடி மோஸ் சிறிதும் பயப்படாமல் படகில் நிற்கிறார்.
அப்போது படகின்மீது ஏறிப்பார்க்கிறது அந்தக் கடல்பாம்பு.
யாரையோ தேடுவதுபோல சில விநாடிகள் தேடிவிட்டுக்
கீழிறங்கி வந்த வழியே சென்றுவிடுகிறது.

ஒருவேளைக் கடல்பாம்பு தேடிவந்த விருந்தினர்
அந்தப் படகில் பயணம் செய்யவில்லையோ…?

ஆனாலும், புரோடி மோஸைப் பாராட்டியே தீர வேண்டும்.
நடுக்கடலில் தன்னந்தனியாக இருந்த அவர் பாம்பைக்கண்டு
சிறிதும் அச்சம்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.