டேய் பசிக்குது…சீக்கிரமா குடுங்கடா…நெறய்ய எடத்துக்குப் போகணும்…

259
Advertisement

யானைக்குட்டி ஒன்று மிருகக் காட்சி சாலையில், பார்வையாளர்களிடம்
பழங்களைப் பசியோடு பிடுங்கித் தின்ற வீடியோ
பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது-

சிங்கப்பூர் மிருகக் காட்சி சாலையில்தான்
இந்த ரசனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது,

அங்கு பார்வையாளர்கள் இருவர் அமர்ந்தபடி
பழங்களைத் தின்றுகொண்டிருக்க, அப்போது அங்குவரும்
யானைக்குட்டி அவர்களைக் கடந்துசெல்கிறது-

சில விநாடிகளில் பின்னோக்கி வந்து அங்கு அமர்ந்திருப்பவர்களிடம்,
டேய் பசிக்குதுடா…..ஏதாச்சும் இருந்தா குடுங்கடா…உங்கிட்ட என்னடா இருக்கு-
நீ கையில என்னடா வச்சிருக்க..…சட்டுனு குடுடா…வாக்கிங் போகணும்
என்பதுபோல, அவர்கள் கையில் வைத்திருக்கும் பழத்தைப் பிடுங்கித் தின்கிறது.

வேறு ஏதாவது கையில் வைத்திருக்கிறார்களா எனத் துழாவுகிறது.
அப்போது அந்த இருவரில் ஒருவர் ஏமாற்ற முயல,
யானைக்குட்டியோ அதனையும் பிடுங்கித் தின்கிறது.

போடா என் பிஸ்கோத்து….என்று மனதுக்குள் சொல்லியவாறே விரைந்து செல்கிறது.