திருமண விழாவில் கலந்துகொண்ட பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

313
Advertisement

திருமண விழாவில் கலந்துகொண்ட பெண்ணின் உடம்பில் சுடப்பட்டது 3 மாதங்களுக்குப் பிறகு தெரியவந்துள்ள அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஆதி ப்லோய். இந்தப் பெண்மணி மேற்குக் கரையிலுள்ள ப்சாகோட் ஒயின் தொழிற்சாலையில் சில மாதங்களுக்குமுன்பு நடைபெற்ற நெருங்கிய நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்டார். அதன்பின் வீடு திரும்பிய ப்லோய்க்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளது.

தசைப்பிடிப்பு காரணமாக முதுகுவலி ஏற்பட்டிருக்கக்கூடும்,விரைவில் வலி நீங்கிவிடும் என்று கருதியிருந்துள்ளார். சில நாட்களாகியும் வலி நீங்காததால், மருத்துவரிடம் சென்றுள்ளார்.

Advertisement

டாக்டரோ வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். ஒரு மாதம் அந்த மாத்திரைகளை விழுங்கியும் வலி நீங்கவில்லை.

3 மாதங்களுக்கும் மேலாக வலி நீடித்தது, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரை சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது முதுகுத் தண்டுவடம் அருகே ஒரு உலோகப்பொருள் இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது உடலில் 5.56 மில்லி மீட்டர் அளவுள்ள தோட்டா ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
தற்போது வலி நீங்கி நிம்மதியாக இருக்கிறார் ஆதி ப்லோய்.

இதுபற்றிக்கூறியுள்ள அப்பெண், திருமண விழாவில் யாரோ என் முதுகில் கடுமையாக அடிப்பதைப்போல உணர்ந்தேன். தோள்முதல் கால்வரைக் கடுமையான வலி இருந்தது. என்றாலும், என் ஆடையில் எந்த ஓட்டையையும் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு டீக்கடையிலிருக்கும் வாடிக்கையாளரிடம் அடிவாங்கிய பின் தனது நண்பர்களிடம் இது ஒரு வைத்தியம் எனப் பேசி சமாளிப்பார். அதைப்போல உள்ளது இந்த சம்பவம்.