Wednesday, December 11, 2024

இப்படி சாப்பிட்டா மட்டும் தான் பேரீச்சம் பழத்தோட பயன் கிடைக்கும்

அண்மை காலங்களில், உடல்நலனில் அக்கறை செலுத்தும் பலரும் சக்கரைக்கு மாற்றாக பேரீச்சம் பழத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சீரான செரிமானத்தை உறுதி செய்யும் பேரீச்சம் பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு, குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

வலுவான எலும்புகளுக்கு காரணமாக அமையும் பேரிச்சம் பழம், இரத்த அழுத்தத்தை குறைத்து மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. உடல் சோர்வு, இரத்த சோகை, வீக்கம் போன்றவற்றை சரி செய்வதோடு கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் பேரீச்சம் பழத்தை எப்படி சாப்பிட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என உணவியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, நண்பகலில் சாப்பிடுவது அல்லது இனிப்பாக எதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும் போது பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.

உடல் எடை அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள் இரவில் தூங்குவதற்கு முன் பேரீச்சம் பழத்தை நெய்யுடன் சாப்பிட வேண்டும்.

இரவில் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடும் பேரீச்சம் பழத்தில் பைட்டிக் அமிலம் குறைந்து எளிதாக செரிமானம் ஆக உதவும். 

மேலும், தினமும் மூன்றில் இருந்து நான்கு பேரீச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!