சொகுசு வீட்டுக்கு வாடகை ஓராண்டுக்கு 74 ரூபாய் மட்டுமே !

161
Advertisement

ஓராண்டுக்கு வெறும் 74 ரூபாய் மட்டுமே வாடகை வசூலிக்கும் கிராமம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஜெர்மனியில் உள்ளது FUGGEREI என்னும் பகுதி. 1516 ஆம் ஆண்டு ஆக்ஸ்பர்க் நகரின் பிரபல தாமிர வியாபாரியான ஜேக்கப் ஃபக்கர். இந்த எஸ்டேட்டை உருவாக்கியுள்ளார்.
நகருக்குள் உள்ள கிராமம் என்னும் பெயரைப் பெற்றுள்ள இந்தப் பகுதியில் 1.30 டாலர் அல்லது 0. 88 யூரோ நாணயம் மட்டுமே ஆண்டு வாடகையாக வசூலிக்கப்படுகிறது. வீடுகள் கட்டப்பட்டதிலிருந்து 500 ஆண்டுகளாக வீட்டுவாடகை உயர்த்தப்படவில்லை என்பதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

முதன்முதலில் 1523 ஆம் ஆண்டில் 52 வீடுகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு வீடும் 500 முதல் 700 சதுர அடி அளவில் கட்டப்பட்டது. வரவேற்பறை, ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, பொருட்கள் வைக்கும் அறை ஒன்று என ஒரு குடும்பத்துக்குத் தேவையான வசதிகளோடு இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

Advertisement

அவை இரண்டு அடுக்குமாடிகளாகக் கட்டப்பட்டது. தற்போது இங்கு 140 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் 150பேர் வசித்துவருகின்றனர்.

இங்கு வசிக்க விரும்புவோருக்கு சில நிபந்தனைகளும் உள்ளன. ஆக்ஸ்பர்க் நகரில் பணிபுரிபவராக இருக்க வேண்டும், கத்தோலிக்கக் கிறிஸ்துவராக இருக்க வேண்டும். தோட்டக்கலையில் ஈடுபடவும், இரவு நேரங்களில் காவல்புரியவும் தயாராக இருக்க வேண்டும்.

மிகமுக்கியமாக, இந்த எஸ்டேட் நிறுவனரான ஜேக்கப் ஃபக்கர் நலனுக்காகத் தினமும் மூன்று வேளை பிரார்த்தனை செய்பவராக வேண்டும். இந்த நிபந்தனைகளை அவர்கள் பூர்த்திசெய்ய வேண்டும்.

இந்த வீடுகளில் வசிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் 30 முதல் 40 பேர் விண்ணப்பிக்கின்றனர். தற்போது 80 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இரவு 10 மணிக்குமேல் இந்தக் கிராமத்தின் நுழைவாயில் பூட்டப்பட்டுவிடும். அதற்குப் பிறகு குடியிருப்புக்குள் செல்ல வேண்டுமானால் இரவு நேரக் காவலருக்கு காசு கொடுக்க வேண்டும்.