ஒரு மீன் விலை 7.8 லட்சம்

333
Advertisement

கடலில் கிடைக்கும் அரிய வகை மீனான குரோக்கர்
(croaker fish) ஒன்றின் விலை 7 லட்சத்து 80
ஆயிரத்து விற்பனையாகியுள்ளது பரபரப்பாகியுள்ளது.

மருத்துவக் காரணங்களுக்காக இந்த வகை மீன்கள்
பயன்படுத்தப்படுகிறது.

இந்த மீனிலுள்ள ஏர் பிளாடர் என்ற பகுதி அறுவை
சிகிச்சைக்குப் பயன்படுகிறது- அறுவை சிகிச்சை
முடிந்து தையல் போடப்படும்போது இந்த ஏர் பிளாடர்
பயன்படுகிறது- இதைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை
செய்தால், பக்க விளைவுகள் இன்றிக் காயம் குணமாகி
விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் க்ரேக்கர் மீன்

இதயம் தொடர்பான அறுவை சிகிச்சையின்போது
பயன்படுகிறது- பக்க விளைவுகளும் இருக்காது.
காயமும் விரைவில் குணமாகிறது என்கின்றனர்
மருத்துவர்கள்.

பாகிஸ்தானிலுள்ள குவாதார் மாவட்டத்திலுள்ள
மீனவர்கள் இந்த குரோக்கர் மீனைப் பிடித்துள்ளனராம்.
சுமார் 26 கிலோ எடைகொண்டிருந்த இந்த மீன்
பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த விலைக்கு விற்பனை
ஆகியுள்ளது.

கேன்சர் நோயைக் குணப்படுத்துவதாகவும் நோயாளிகளின்
ஆயுளை நீட்டிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, இந்த ரக மீன்கள் சீனா தென்கொரியாவுக்கு
இடைப்பட்ட சவுத் எல்லோ கடல் பகுதியில் அதிகளவில்
காணப்படுகின்றன. இந்த மீன்கள் ஆழ்கடலில் வாழும்
தன்மைகொண்டவை.

இது கரு உருவாகும் காலம் இரண்டு மாதங்கள் தானாம்.
அப்போதுதான் கடலின் மேல்பகுதிக்கு வருமாம். அந்த
சமயத்தில் இந்த மீனை லபக்கென்று பிடித்துவிடுகிறார்கள்.
சுமார் 8 ஆண்டுகள் வாழுமாம் இந்த ரக மீன்கள்.

1970களில் சீனாவில் சுமார் 2 லட்சம் குரோக்கர் மீன்கள்
பிடித்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டனவாம்.
அதன்காரணமாக இந்த மீன்களுக்குத் தட்டுப்பாடு வந்து
விட்டதாம். எனவேதான் இந்த விலை உயர்வாம்.

சீனா, தைவான், கொரியா, ஹாங்காங் நாடுகளில் இந்த
மீன்களைக்கொண்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்
நிறைய உள்ளனவாம்.