கொட்டிக் கிடக்குது தங்கம்

272
Advertisement

1930 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு சவரன்
தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா…
சொன்னா நம்ப மாட்டீங்க…
வெறும் 14 ரூபா தான்.

ஆனா, இன்றைக்கு ஒரு கிராமின் விலையே
4 ஆயித்து 500 ரூவா-
இது கூடலாம்,
ஆனா……குறைவது சந்தேகமே…

90 வருசத்துக்கு முன்னால வெறும் 14 ரூபாதான்னா…
மூவாயிரம் வருஷத்துக்கு முன்னால…
கற்பனையே பண்ண முடியலயா
பெரு மூச்சு விடாதீங்க…

கோலார்லயா,,,,,,தென்னாப்பிரிக்காவுலயான்னு
உங்க மனம் தவிக்குதா

எகிப்துலதான் …
வட ஆப்ரிக்காவுலதான் எகிப்து இருக்கு…

உலகின் மிக நீளமான நைல் நதி பாயும் வளமான
நாடுதான் எகிப்து. இந்த நதிக்கரை ஓரத்துலதான்
இந்த நாட்டோட பெரும்பாலான மக்கள் வாழ்றாங்க…

கிட்டத்தட்ட 40 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவுல
விவசாயத்த தொழிலா செய்றாங்க…

மீதியுள்ளவங்கதான் பாலைவனப் பகுதியில வாழ்றாங்க…
10 ஆயிரம் வருஷத்துக்கு முன்பே வேட்டையாடுதல்,
மீன்பிடித்தல் போன்ற தொழில்கள் இங்க சிறப்பா நடந்திருக்கு.

கணிதம், கட்டுமானம், கண்ணாடி, மருத்துவம், இலக்கியம்,
நீர்ப்பாசனம், வேளாண்மை, கடல் வாணிபம் போன்ற பல
துறைகள்ல எகிப்து நிபுணத்துவம் பெற்றிருந்துச்சு..

உலகப் புகழ்பெற்ற கிளியோபாட்ரா அழகி, இந்த நாட்டோட
அரசிதான்ங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்திதான்.

செல்வச் செழிப்பான நாடான இருந்ததால மன்னர்கள்லாம்
தங்க நகைகள், ஆபரணங்கள தங்கள் விருப்படி அணிந்து
மகிழ்ந்துள்ளனர். காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால்
அவர்கள் வாழ்ந்த நகரம் பூமிக்குள் புதையுண்டு போனதாகக்
கூறப்படுகிறது…

காலச் சுழற்சியில் இழந்துபோன தங்கள் பெருமைகளை
மீட்கும் விதமாக தொல்லியல் ஆய்வுகளை அதிகளவில்
மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக பூமிக்குள் புதைந்திருந்த
ஆட்டென் என்ற நகரைத் தொல்லியல் அறிஞர்கள்
அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்நகரம் தங்க நகரமாகத் திகழ்ந்துள்ளது. இதனைக் கண்டறிந்த
தன்மூலம் இழந்த தங்க நகரத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக
மார்தட்டிக்கொள்கின்றனர் எகிப்திய தொல்லியல் அறிஞர்கள்.

இந்நகரைக் கண்டுபிடிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பல
முயன்றன. ஆனால், அவையெல்லாம் வெற்றிபெறவில்லை.
2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் இந்த இடத்தில்
பூமியைத் தோண்டத் தொடங்கிய எகிப்திய அகழாய்வுக்
குழுவினர் சில வாரங்களிலேயே இந்நகரைக் கண்டறிந்தனர்.

தலைநகர் கெய்ரோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலை
விலுள்ள லக்ஸர் பகுதியில் இந்நகரம், கிறிஸ்து பிறப்பதற்கு
1300 ஆண்டுகளுக்கு முன்பே செல்வச் செழிப்புடன் திகழ்ந்துள்ளது.

ஏராளமான தங்க நகைகள் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்
பட்டுள்ளன. இது அகழ்வாராய்ச்சி செய்தவர்களை வியப்பில்
ஆழ்த்தியுள்ளது. தங்கத்தை அப்போதே மக்கள் பூமியில்
புதைத்து வைத்திருந்தனரா அல்லது வாழ்ந்து மடிந்தபோது
அவர்களோடிருந்த ஆபரணங்கள் பூமியில் புதைந்துபோனதா
என்பது குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர் தொல்லியல்
அறிஞர்கள்.

இன்னும் தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்கலாம் என்பதே
அவர்களின் நம்பிக்கை.