மத்திய பிரதேச மாநிலம் தமோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், போலி மருத்துவர் ஒருவர் இதய அறுவை சிகிச்சை செய்ததில் ஏழு பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளியின் உண்மையான பெயர் விக்ரமாதித்ய யாதவ் என அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி மருத்துவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் இருந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.