கோவையில் முறையான சாலை வசதியில்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராமத்தினர் தூக்கி சென்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வரும் சூழலில், அடிப்படை வசதிகள் கிடைக்க பெறாமல் அவதி அடைந்துள்ளனர்.
இதனிடையே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சடலத்தை, முறையான சாலை வசதியில்லாததால், டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராமத்தினர் தூக்கி சென்றனர். இதனை அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின இளைஞர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்.