சாலையில் ஓடி மேம்பாலத்தின்கீழ் சிக்கிய விமானம்

413
Advertisement

ஏர் இந்தியா விமானம் ஒன்று சாலை மேம்பாலத்தின்கீழ் ஓடிச்சென்று சிக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா போஸ்ட் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட அந்த போயிங் 737 ஏர் இந்திய விமானம் சேவையிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டது. அதனைத் தனியார் நிறுவனம் ஒன்று ஸ்கிராப்புக்காக வாங்கியுள்ளது. அதன்பிறகு ஸ்கிராப்புக்காக சாலை வழியாக அந்த விமானம் கொண்டுசெல்லப்பட்டது.

டெல்லி விமான நிலையம் அருகே டெல்லி குருகிராம் நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் வழியாகச் சென்றபோது அந்த விமானம் மேம்பாலத்திலிருந்து வெளியே வரமுடியாமல் மாட்டிக்கொண்டது.

இந்த சம்பவம் 2021, அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் 2 ஆண்டுகளுக்குமுன் மேற்கு வங்காளத்தில் நடைபெற்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.

இறக்கைகள் இன்றி சாலை வழியாக சென்ற அந்த விமானம் பாலத்தின்கீழே உரசிக்கொண்டு செல்வது வீடியோ பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.