விபத்தில் பயணிகளைக் காப்பாற்றிய பைலட்

332
Advertisement

விமான விபத்து நிகழாமல், பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பைலட்டுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் யூனிஸ் புயல் இங்கிலாந்தையே புரட்டிப்போட்டது. அந்த சமயத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிட் 787 ரக விமானம் ஒன்று இங்கிலாந்தை அடைந்தது. அங்கு லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்க வேண்டிய விமானம், யூனிஸ் புயலால் தடுமாறியது.

அந்தச் சூழ்நிலையில் மனம் பதறாமல் சாமர்த்தியாக விமானத்தை இயக்கினார் பைலட் விமானத்திலிருந்த கேப்டன்கள் அஞ்சித் பரத்வாஜ், ஆதித்யா ராவ் இருவரும் திறம்பட அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து, விமானத்தைத் தரையிறக்க வழிகாட்டினர்.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.
விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கி, சேதம் ஏற்படாமல் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பைலட்டுக்கு வலைத்தளவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.