வீடற்ற மனிதனை அரவணைத்த செல்லப் பிராணி

418
Advertisement

தங்குவதற்கு வீடில்லாமல் சாலையோரம் தவிப்பிலிருந்த மனிதனைப் பாசத்தோடு கட்டிக்கொண்ட செல்லப் பிராணியின் செயல் ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

ட்டுவிட்டரில் இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஒரு வீடியோ மனிதர்களின் இதயங்களை வருடியுள்ளது. மனிதர்களின் சிறந்த நண்பன் நாய் என்பதை இந்த வீடியோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த வீடியோக் காட்சியில், வீடற்ற ஒருவர் சாலையோரம் அமர்ந்திருக்கிறார். அப்போது அங்குவரும் ஒரு செல்லப் பிராணி, அவர்முன் வந்து சிறிதுநேரம் தயங்கித் தயங்கி நிற்கிறது. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.

பின்னர், பல்லாண்டுகளுக்குப் பிறகு, நீண்டகால நண்பர்கள் சந்தித்துக்கொள்வதுபோல, அந்த வீடற்ற மனிதரின் மடியில் சென்று அமர்ந்துகொள்கிறது. இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பாசத்தைப் பொழிகின்றனர். அவர்கள் இருவர் கண்களில் மட்டுமன்றி, அவர்களின் பாசத்தைக் காண்போரின் கண்களிலும் ஆனந்தம் பொங்குகிறது.

வீடில்லை என்கிற கவலை இருவரிடம் இல்லை.

அன்பும் பாசமும் இருக்கும் இடம்தானே வீடு…அது இருவருக்கும் இங்கே இருக்கிறது.