https://www.instagram.com/p/CMwzNVCJOne/?utm_source=ig_web_copy_link
SWEET PEA என்று அழைக்கப்படும் பறவை ஒன்று
நாயிடம் ஐ லவ் யூ சொன்ன வீடியோ சமூக வலைத்தளத்தைக்
கலக்கி வருகிறது.
வென்டி மேரி என்னும் பெண்மணி இந்த வீடியோவை
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் வசித்துவரும்
வென்டி மேரி தன்னுடன் மூன்று பறவைகளை வளர்த்து வருகிறார்.
அவரை பேரட் லேடி (கிளிப் பெண்மணி) என்று அப்பகுதிவாசிகள்
செல்லமாக அழைக்கின்றனர்.
இவர் சில மாதங்களுக்குமுன்பு தனது வீட்டுக்கு நாய்க்குட்டி
ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது நாற்காலியில் அமர்ந்துகொண்டு
அந்த நாய்க்குட்டியைத் தனது மார்போடு அணைத்திருக்க,
புதிய குடும்ப உறுப்பினரை வாஞ்சையோடு தனது காலால்
வருடிக்கொடுக்கத் தொடங்கியது அவர் வளர்த்துவரும் கிளி.
அதைப் பார்த்துப் பூரிப்படையும் அந்தப் பேரட் லேடி பப்பியிடம்
ஐ லவ் யூ சொல் என்று கூறுகிறார். சொன்னதைச் சொல்லும்பி
பிள்ளையான கிளியும் அதைக்கேட்டு ஐ லவ் யூ என்று சொல்கிறது.
அதைப் பார்த்து மேலும் ஆனந்தத்தில் திளைக்கிறார் வென்டி மேரி.