செல்லப்பிராணிக்காகத் தனி விமானத்தை முன்பதிவு செய்த எஜமானர்

274
Advertisement

எஜமானருக்கு விசுவாசமாக இருப்பதில் நாய்கள் சிறந்துவிளங்குகின்றன
என்பது அனைவரும் அறிந்ததுதான். மனிதர்களுக்கும் நாய்களுக்குமான
நட்பு என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. மனிதர்களுக்கு
சிறந்த நண்பனாகவும் விசுவாசமாகவும் இருக்கும் செல்லப்பிராணிகளில் நாய்களே
முதலிடம் வகிக்கின்றன.

அந்த வகையில் தன்னுடைய செல்லப் பிராணிக்காக ஏர் இந்தியாவின் A1 671 ரக விமானத்தில்
பிசினஸ் முழுவதையும் மொத்தமாக முன்பதிவு செய்துள்ளார் ஒருவர்.

இதைத் தொடர்ந்து மும்பையிலிருந்து ஒரேயொரு நபராக சென்னை வரை
பிசினஸ் வகுப்பில் பயணித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது

மும்பையிலிருந்து சென்னை வருவதற்கான கட்டணம் சுமார் இரண்டரை லட்சத்துக்கும்
அதிகமாகும். ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸில் பயணம்
செய்வதற்கு பயணிகள் கட்டணம் 20 ஆயிரம் ரூபாயிரம் ஆகும்.
இந்தக் கேபினில் 12 இருக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் விமானத்தில் செல்லப்பிராணிகளை அனுமதிக்கும்
ஒரே விமானம் ஏர் இந்தியா தான். செல்லப்பிராணிகள் இதற்கு முன்பும்
ஏர் இந்தியா விமானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஒரு விமானத்தில் இரண்டு செல்லப் பிராணிகள் மட்டுமே
பயணிக்க அனுமதிக்கப்படும். அதுவும் கடைசி இருக்கைதான் ஒதுக்கப்படும்.
ஆனால், ஒட்டுமொத்த பிசினஸ் கிளாஸ் கேபின் முழுவதும்
ஒரேயொரு செல்லப் பிராணிக்காக புக்கிங் செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

என்றாலும், அந்த செல்லப்பிராணி, எஜமானரின் புகைப்படமோ
மற்ற விவரங்களோ வெளியாகவில்லை. இந்த செல்லப்பிராணி MALTESE
ரகத்தைச் சேர்ந்தது. மிகவும் அழகான நாய் இனங்களுள்
மால்டிஸ் இன நாயும் ஒன்று.

தன்னுடைய செல்லப்பிராணி சொகுசாகப் பயணம் செய்வதற்காக
ஏர் இந்தியாவின் பிசினஸ் கிளாஸ் கேபின் முழுவதையும் எஜமானர் ஒருவர்
முன்பதிவு செய்து அசத்தியுள்ள விசயம் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவியது.