Thursday, January 15, 2026

பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்

வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு கடந்த 24 ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், இன்று குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்ற இருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை கைகளினால் பிரித்து எடுக்காமல் கத்தரிக்கோளை பயன்படுத்தி வெட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டைவிரல் துண்டாகியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News