Saturday, December 6, 2025

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை?

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வரும் அக்டோபர் 20ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. திங்கட்கிழமை அன்று பண்டிகை வருவதால், அக்டோபர் 18, 19, 20 என மூன்று நாட்கள் தொடர்ச்சியான அரசு விடுமுறை கிடைக்கிறது.

இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) இரவு முதல் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த மூன்று நாள் விடுமுறைகளில், ஊருக்குச் சென்று திரும்பும் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு இன்னும் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்களும் பொதுமக்களும் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வருகிறது, அக்டோபர் 21 (செவ்வாய்க்கிழமை) அன்று கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த நாளுக்கு பதிலாக மற்றோரு சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

அதாவது, அந்த ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டால், வெளியூர் பயணத்திலிருந்து திரும்புவோருக்கு நிம்மதியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் கூடுதலாக உற்சாகம் அடைந்துள்ளனர். எனினும் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. விரைவில் இந்த அறிவிப்பைவெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News