https://www.instagram.com/reel/CRTtTgbHWP_/?utm_source=ig_web_copy_link
மகாராஷ்டிர மாநிலத்தில் மணமேடைக்கு லேப் டாப்புடன்
வந்து மணமகளுக்கு தாலி கட்டிய புது மாப்பிள்ளை பற்றிய வீடியோ
சமூக வலைத்தளத்தில் வைரலானது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனப்
பணியாளர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனர்.
அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள்
வீட்டிலிருந்தே பணியாற்றத் தொடங்கினர்.
ஆனால், தன் திருமணத்தின்போது மணமேடையிலும் லேப்
டாப்புடன் மணமகன் ஒருவர் பணியாற்றத் தொடங்கியது
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உறவினர்கள் பலர் சூழ்ந்திருக்க, மணமகனோ சேரில் அமர்ந்து
மடியில் லேப் டாப்பை வைத்துக்கொண்டு பணியில் மும்முரமாக
இருக்கிறார். மணமகன் மடிக்கணினியில் தன் பணியை முடித்த
பிறகே, புரோகிதர் திருமணச் சடங்குகளை செய்யத் தொடங்குகிறார்.
இன்னும் சில நிமிடங்களில் தன் கணவனாகப்போகும் மணமகனின்
பணி ஈடுபாட்டையும் அக்கறையையும் பார்த்து மணமகள் பெருமிதம்
பொங்கப் புன்னகைத்தபடி இருக்கிறார்.
காலம் முழுவதும் தனக்காகவும் குடும்பத்துக்காகவும் இப்பொழுதே
உழைக்கத் தொடங்கிய கணவரை எண்ணி மனதில் காதல் கோட்டை
கட்டிக்கொண்டிருப்பாரோ இந்த இளவரசி….?