அம்மான்னா சும்மா இல்லேடா…

732
Advertisement

ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மா எந்தளவுக்கு முக்கியத்துவம்
என்பதை விவரிக்கத் தேவையில்லை.

ஒவ்வொரு தருணத்திலும் தன் குழந்தைகளுக்காகவே
வாழ்ந்து தன் வாழ்வைத் தியாகம் செய்பவள் தாய்தான்.
அதனாலேயே அம்மா என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.

சில நொடிகள்கூட தாயைவிட்டுப் பிரியாத குழந்தைகள்தான் உலகில் அதிகம்.
எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்தவுடனே அம்மாவைத்தான் தேடுவோம்.

உலகின் எந்த நாடாக இருந்தாலும் இது பொருந்தும்.
ஓரறிவு கொண்ட உயிரினம்முதல் ஆறறிவுகொண்ட மனித இனம்வரை
அம்மாவுக்குத்தான் முதலிடம்.

தாயின் அன்பைப் பெற்று வளரும் குழந்தை
சமூகத்தில் சிறந்த மனிதனாக உயர்வான வாழ்க்கை வாழும்.
தியாகத்தின் மறுபெயர்தான் அம்மா.

அந்த வகையில், தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறாள் ஒரு தாய்.
அடுக்கிவைக்கப்பட்டுள்ள செங்கல்கள் அருகே இருக்கும் தாயும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
திடீரென்று அந்த செங்கல்கள் சரிந்துவிழத் தொடங்கியதும்
தன் உயிரைப்பற்றிக் கவலைகொள்ளாமல் தன் குழந்தையைக் காப்பாற்றிவிட்டார் அந்தத் தாய்.
தாயின் செயலை இந்த வீடியோவில் பாருங்களேன்..

தன் உயிர் போனாலும் பரவாயில்லை. தன் குழந்தையாவது பிழைத்துக்கொள்ளட்டும்
என்கிற உயரிய நோக்கத்தில் சரிந்து விழும் செங்கல்கள்
தன் குழந்தைமீது விழாமல் தடுத்துக் காப்பாற்றுகிறார்…