கமாண்டரை எட்டிஉதைத்த குரங்கு

227
Advertisement

அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கமாண்டர்
ஒருவரைக் குரங்கு ஒன்று ஓடிவந்து முதுகில் மிதித்து
கீழே தள்ளிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தாலும் சில
நேரங்களில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ள
பகுதிக்குள் நாயோ குரங்கோ வந்துவிடுவதுண்டு. அவை
அமைதியாக எங்காவது தானாகவே சென்றுவிடும்.

ஆனால், அணிவகுப்பு ஒன்றில் புகுந்த குரங்கு அதன்
குணத்தைக் காட்டியுள்ளது.

மைதானம் ஒன்றில் மூன்று வரிசையாக அணிவகுப்புப்
பயிற்சி நடந்துகொண்டிருக்கிது. வீரர்கள் லெஃப்ட் ரைட்
என்று அணிவகுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.

திடீரென்று எங்கிருந்தோ மைதானத்துக்குள் புகுந்த
குரங்கு ஒன்று அங்கு அணிவகுத்து வந்துகொண்டிருந்த
வீரரை தாவிக் குதித்து தன் கால்களால் பலம்கொண்ட
மட்டும் முதுகில் அழுத்தித் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது.

இதில் வீரர் தடுமாற, அவரது தொப்பி கீழே விழுந்து விடுகிறது.
அவர் நிலை தடுமாறி அருகில் அணிவகுத்து வந்துகொண்டிருக்கும்
வீரர்கள் வரிசை அருகே செல்ல, சுதாரித்துக்கொள்ள முடியால்
அதிர்ச்சியில் திரும்பிப் பார்க்கிறார்.

குரங்கு தள்ளியதைக்கூடத் தாக்குப் பிடிக்காமல் நிலை
தடுமாறியதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

குரங்கு சேட்டை என்பது இதுதானோ…?