இரண்டு சிலைகள் ஒரே சிலையாக மாறும் அதிசயம்

435
Advertisement

தனித்தனியாக உள்ள இரண்டு சிலைகள் ஒரே சிலையாக
மாறும் அதிசயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஜார்ஜியா நாட்டின் கடலோர நகரம் படுமி.
இந்நகரில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்து வருகிறது.

ஜார்ஜியா நாட்டின் இளவரசி நினோ மற்றும் ஒரு முஸ்லிம்
இளைஞரின் சிலைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
1937 ஆம் ஆண்டில் குர்பன் சைட் என்ற எழுத்தாளர்
எழுதிய பிரபலமான நாவலில் வரும் கதாபாத்திரங்கள்தான்
இந்தச் சிலைகள்.

பிரம்மாண்ட காதல் கதையை அடிப்படையாகக்கொண்டது இந்த நாவல்.
இந்தக் கதையின்படி, சோவியத் ரஷ்யாவின் படையெடுப்பால்
அலி, நினோவின் காதல் நிறைவேறாமல் போய்விடுகிறது.
இதனால் இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.

இந்தக் கதையின் அடிப்படையில் இருவரின் எஃகு
சிலைகளையும் ஜார்ஜியா நாட்டின் சிற்பக்கலைஞரான
டமாரா க்வேசிடாட்ஷே வடிமைத்துள்ளார்.

2007ல் வடிவமைக்கப்படத் தொடங்கிய இந்தப் பணி
2010ல் நிறைவடைந்தது. தினமும் மாலை 7 மணிக்கு நகரத் தொடங்கும்
26 அடி உயரமுள்ள இந்தச் சிலைகள் 10 நிமிடங்கள்
சிறிதுசிறிதாக நகர்ந்து ஒரே சிலையாக மாறுகிறது.

காதல் சிலைகளான இந்த இரண்டு சிலைகளும் ஒன்றையொன்று
நெருங்கிவந்து ஒன்றாக இணையும்படி அவர் அமைத்துள்ளது
பொறியியல் அதிசமாக அமைந்துள்ளது.

நாவலில் இணைய முடியாமல்போன காதலர்களை
இந்தச் சிற்பி இணைத்து வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள்
ஜாலியாகக் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.