ரிலேயில் பின்னோக்கி ஓடும் சிறுமி

136
Advertisement

ரிலே எனப்படும் தொடர் ஓட்டப் பந்தயத்தில் சிறுமி ஒருத்தி
ஓட்டப் பந்தயக்கோலை வாங்கிக்கொண்டு பின்னோக்கி ஓடுவதைப்
பார்த்து வேடிக்கையாக சிரிக்கின்றனர்.

விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது என்பது வெற்றிபெறுவதற்காக
மட்டுமல்ல, குழு மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும்தான். போட்டியில்
கலந்துகொள்ளாமலே போட்டியை விமர்சிப்பதைக் காட்டிலும் போட்டியில்
கலந்துகொண்டோம் என்கிற மனப்பான்மையுடன் திகழச்செய்வதே போட்டிப்
பந்தயங்களின் முதன்மையான நோக்கம்.

முதலிடத்திற்கு வந்துவிட வேண்டும் என்னும் ஆர்வம் மிகுதியால்
முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாகப் பின்னோக்கி ஓடுகிறாள் இந்தச் சிறுமி.
சிறுமியின் வேகத்தில் வெற்றியின் உத்வேகம் தெரிகிறது. அதைப் பார்த்து
பலரும் பாராட்டுகின்றனர். அதேசமயம், அறியாமை அவரைப் பின்னோக்கி ஓடச்செய்கிறது.

Advertisement

கல்வி பெறப்பெற அறிவில் சிறந்து விளங்குவோம். அதனால்தான் பெரியோர்
நூல் பல கல் என்றனர்.