8 குடும்பங்களுக்கு ஒரு உருளைக்கிழங்கு போதும்……எப்படித் தெரியுமா?

275
Advertisement

உலகிலேயே மிகப்பெரிய உருளைக்கிழங்கு கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகில் யாரும் பார்த்திராத அளவில் சுமார் எட்டு கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கு ஒன்று நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டன் நகரில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் விளைந்துள்ளது.

ஹாமில்டன் நகரைச் சேர்ந்த கோலின்- டோனா கிரெய்க் பிரெவுன் தம்பதி சமீபத்தில் தங்கள் கொல்லைப்புறத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது கோலின் தனது கால் ஏதோ ஒரு பாறைமீது மோதியதுபோல உணர்ந்தார்.

அதைத் தொடர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்தபோது மிகப்பெரிய உருளைக்கிழங்கு விளைந்திருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். காரணம், மலைபோல பெரிய அளவில் இருந்தது அந்த உருளைக்கிழங்கு. முதலில் அது பூஞ்சைக்காளானாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்தார் கோலின்.

அதனால் அதில் சிறிய அளவு வெட்டியெடுத்து சுவைத்துப் பார்த்தார். அப்போதுதான் அது உருளைக்கிழங்கு என்பதை உணர்ந்தார். உடனே இதுபற்றித் தன் மனைவியிடம்,” நான் வளர்த்த ஸ்வீட் பொட்டட்டோ என்று பெருமிதம்” கலந்த மகிழ்ச்சியோடு கூறினார்.

பின்னர், இருவரும் அந்த உருளைக்கிழங்குக்கு டக் என்று பெயர் சூட்டினர். டக்கின் புகைப்படத்தைத் தங்களின் ஃபேஸ் புக்கில் பதிவிட்டனர். அதைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

7 கிலோ 900 கிராம் எடைகொண்ட இந்த டக் உலகிலேயே மிகப்பெரிய உருளைக்கிழங்கு என்னும் பெருமையைப் பெறுவதற்காக கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.