பேயைப் படம்பிடித்து போட்டோகிராபர் ஒருவர் அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் லிங்கன்ஷையர் பகுதியில் பேய்களை மட்டுமே படம்பிடிப்பதற்கென தி ரெட்போட் கோஸ்ட் ஹன்டர்ஸ் என்னும் பெயரில் ஒரு குழு இயங்கிவருகிறது. இந்தக் குழு சமீபத்தில் மெத்தரிங்ஹாம் என்னும்பகுதி அருகே சென்றபோது, அங்கு கேத்தரின் என்ற பேய் ஒன்று சிகரெட் புகைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துள்ளது.
உடனடியாக அக்குழு தங்கள் காரில் இருந்தபடியே அந்தப் பேயைத் கேமராவில் படம்பிடித்துள்ளனர். அந்தப் பேய்க்கு 19 வயது இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் சுவாரசியமான செயல் என்னவென்றால், உறைபனியில் சென்றுகொண்டிருந்த இவர்களின் காரை அந்தப் பேய் மறித்து, விபத்தில் சிக்கிய தன் காதலனுக்கு உதவிசெய்ய அழைத்ததாம்.
அவர்களும் நீங்கள் இருப்பதை எப்படி உணர்வது என்று கேட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து கார் செல்வதற்கு இடையூறாக முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஒளிர்ந்துகொண்டிருந்த காரின் விளக்குகளும் சட்டென்று அணைந்துவிட்டன. அப்போது காரின்முன் சிகரெட் புகைப்பதுபோல அவர்கள் கண்களுக்குத் தெரிந்துள்ளது.
இதனால், ஒரு கணம் திகிலில் ஆடிப்போய்விட்டது அந்தக் குழு.
1945 ஆம் ஆண்டில் கேத்தரினும் அவரது காதலரும் விபத்தில் பரிதாபமாக இறந்துவிட்டனராம். ஆனாலும், தன் காதலனுக்கு உதவுவதற்காக சாலையிலேயே நின்றுகொண்டு உதவி கேட்டபடி உள்ளதாகப் பேய்களைப் படமெடுத்துவரும் தி ரெட்போட் கோஸ்ட் ஹன்டர்ஸ் படக்குழு கூறியுள்ளது.
அந்தப் பேய்க்கு உதவிபுரிவதை நிறுத்தினால், கார் அருகே வந்துவிட்டு உடனடியாக நறுமணத்தைப் பரப்பியபடி மறைந்துவிடுகிறதாம்.