Friday, August 1, 2025

தலைக்கு மேல் ‘தொங்கும்’ கத்தி என்ன செய்ய ‘போகிறார்’ கம்பீர்?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியதாக மாறியுள்ளது.

கடைசி போட்டியை தோற்றால் கூட, இங்கிலாந்து அணிக்கு கவலை கிடையாது. ஏனெனில் தொடர் சமனில் முடிந்து விடும். இதனால் தான் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட தைரியமாக, கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

ஒருவேளை தொடரை சமன் செய்யாமல் இந்த டெஸ்ட் தொடரை இழந்தால், அது கவுதம் கம்பீருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் அதர்டனும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் மைக்கேல் அதர்டன், ” ஏற்கனவே இந்தியா அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களில் தோற்றுள்ளது. சொந்த ஊரில் நியூசிலாந்திடம் 3 – 0 என்ற கணக்கில் தோற்ற அவர்கள், தொடர்ந்து 3 – 1 என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்தார்கள்.

அடுத்ததாக இங்கேயும் இந்தியா தோற்கும் பட்சத்தில் கவுதம் கம்பீர் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார். ஏனெனில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து வளங்களும் இருக்கின்றன. அவர்களுடைய மக்கள் தொகை அதிகம். அதனால் அவர்கள் வெற்றிக்காக காத்திருக்கக்கூடிய ரசிகர்கள் கிடையாது.

அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை எதிர்பார்க்கக் கூடியவர்கள். எனவே 3 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் அது கம்பீருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமையும்,” என்று தெரிவித்து இருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணியின் பயிற்சியாளர்களை மாற்றிட BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன. இதனால் கவுதம் கம்பீருக்கு இந்த டெஸ்ட் தொடர் தற்போது சவாலான ஒன்றாக மாறியுள்ளது .

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News