நட்பின் இலக்கணமான 5 வாத்துக்குஞ்சுகளும் ஒரு குரங்குக் குட்டியும்

334
Advertisement

மேலை நாடுகளில் வாத்துகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள்.
படுக்கையறையிலும் தங்களோடு உறங்குவதற்கு வாத்துகளை அனுமதிக்கிறார்கள்.

நம் ஊரிலோ இறைச்சிக்காக வளர்க்கிறார்கள். ஆனால், மாறுபட்ட
இனங்களான வாத்துக்களும் குரங்குக்குட்டி ஒன்றும் தாயும் மகளும்போல
அன்புகொண்டு, நண்பர்கள்போல சிநேகத்தோடு ஓடியாடி விரட்டிவிரட்டி
விளையாடுவதும், இரை தேடுவதும், பூங்காவில் ஆனந்தமாகத் திரிவது
போலவும் உள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது-

சிறுவர்களும் சிறுமிகளும் எவ்வளவு ஆனந்தமாகக் கள்ளங்கபடமில்லாமல்
ஓடியாடி விளையாடுவார்கள்…அதுபோல இருக்கிறது 5 வாத்துக் குஞ்சுகள்,
ஒரு குரங்குக் குட்டியின் நட்பு.

வெவ்வேறினத்தைச் சேர்ந்த இந்த இரு உயிரினங்களின் சிநேகிதம்
காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது-

தாய் தன் குழந்தைகளை அரவணைத்துக்கொள்வதுபோல்
இந்தக் குரங்குக் குட்டி தன் மார்புமேல் இந்த வாத்துக் குஞ்சுகளை
அணைத்துக்கொள்கிறது- வாத்துக் குஞ்சுகளும் தங்கள் தாய் அருகே
நிற்பதுபோல பேரானந்தத்தில் இரை தேடித் தின்றபடி உள்ளன.

மனிதர்கள் மட்டும் ஏனோ பல காரணங்களால் பகைமை பாராட்டுகின்றனர்.
மாறுபட்ட இனங்களைச் சேர்ந்த இரு உயினங்களின் நட்பு சமாதானமான
உலகுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது-

இவற்றிடமிருந்து மனிதர்கள் எதைக் கற்றுக்கொள்வார்கள் மனிதர்கள்?