பெண் குழந்தையின் பிறந்த நாளுக்கு
நிலவில் பரிசளித்த தந்தை

246
Advertisement

பெண் குழந்தையின் பிறந்த நாளுக்கு தந்தை நிலவில்
பரிசளித்த தகவல் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

மங்கையராகப் பிறப்பதற்கோ நல்ல மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா என்று பாடிய கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளையின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு டாக்டர்
தம்பதியின் செயல் அமைந்துள்ளது.

ஆனால், நடைமுறையில் பெண் குழந்தைகளை வெறுக்கும்
மனநிலைதான் அநேகப் பெற்றோரிடம் உள்ளது. பெண் என்று
தெரிந்துவிட்டால், கருவிலேயே அழிக்கும் வழக்கமும் முன்பு இருந்தது.

இந்த நிலையில், தனக்குப் பெண் குழந்தை பிறந்ததைப் பெருமிதமாகக்
கருதிவருகிறார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுர்விந்து ஜா. டாக்டரான
இவரின் மனைவி சுதாவும் மருத்துவர்தான்.

இருவரும் சொந்தமாக ஒரு மருத்துவமனையை நடத்துவருகின்றனர்.
இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களின்
வம்சத்தில் 7 தலைமுறைகளுக்குப் பிறந்த பெண் குழந்தை என்பதால்,
குடும்பத்தினர் அனைவரும் அந்தக் குழந்தைமீது அதீதப் பாசம் காட்டி
வருகின்றனர்.

பெண் குழந்தை ஆஸ்தா பிறந்து 10 ஆண்டு ஆனது. அப்போது பிறந்த
நாளைப் பெற்றோர் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அத்துடன் நிலவில் ஓர் ஏக்கர் நிலத்தை வாங்கித் தங்களின் செல்ல
மகளுக்குப் பரிசளித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளனர்
பெற்றோர்.

மகளின் மீதான பாசப் பெற்றோரின் செயலுக்கு சமூக வலைத்
தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.