Friday, January 24, 2025

பிறந்த குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தை

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் ஹத்மாத் கிராமதத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவரது இரண்டாவது மனைவி சாந்தி பெஹரா கடந்த டிசம்பர் 19 அன்று பிரசவத்திற்காக மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து சாந்தி பெஹரா டிசம்பர் 22ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை தர்மு பெஹெரா குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்று, அந்த பணத்தை வைத்து இஎம்ஐயில் பைக் வாங்கியுள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் நலக் குழு (CWC) குழந்தை விற்ற நபர் மற்றும் குழந்தையை வாங்கிக்கொண்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு நாங்கள் உரிய நீதிமன்ற ஆவணத்தின் மூலம் சட்டப்படிதான் குழந்தையை தானம் செய்ததாக தம்பதியினர் கூறினர். இருப்பினும் பைக் வாங்க குழந்தையை விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Latest news