Wednesday, February 5, 2025

தமிழ்நாட்டிலேயே மாசில்லாத காற்று இந்த மாவட்டத்தில் தான்..எது தெரியுமா?

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை வெளியிட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள இந்திய நகரங்களில் மிகச்சிறந்த காற்றின் தரம் இருக்கும் நகரமாக திருநெல்வேலி திகழ்கிறது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி முதல் இடத்திலும் அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் இரண்டாவது இடத்தையும் கர்நாடகாவின் மடிக்கேரி பகுதி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் ஐந்தாவது இடத்தில் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

காற்றின் தரம் மிக மிக மோசமாக இருக்கும் நகரத்தில் முதல் இடத்தை தலைநகர் டெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ள இரண்டாவது இடமாக உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தும் மூன்றாவது இடத்தினை மேகாலயாவின் பிரின் ஹேட் நகரமும் பிடித்துள்ளன.

சண்டிகர், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநில பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news