Saturday, August 30, 2025
HTML tutorial

ஆற்றில் வீசப்பட்ட மனுக்கள், ஏற்கனவே தீர்வு காணப்பட்டதாக வட்டாட்சியர் விளக்கம்

தமிழகம் முழுவதும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ‘ உங்களுடன் ஸ்டாலின் ‘திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர் ஐ, வி.ஏ.ஓ., கையெழுத்துடன் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வைகை ஆற்றில் கொட்டிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி உள்ளது. மனுக்களை ஆற்றில் வீசிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்றில் வீசப்பட்ட மனுக்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டதாக திருப்புவனம் வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News