https://www.instagram.com/reel/CawgLz-h0ef/?utm_source=ig_web_copy_link
தனது தாயைக் கண்டுபிடித்த குழந்தையின் செயல்
அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில்
பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஓர் அறையில் ஒரேமாதிரியான
மஞ்சள் நிறப் புடவை அணிந்த 4 பெண்கள் அமர்ந்திருக்
கின்றனர். அப்போது அங்கு குறுநடை போட்டபடி அழகான
குழந்தை ஓடிவருகிறான்.
எல்லாப் பெண்களும் அக்குழந்தையைத் தம்மிடம்
வரும்படி சைகை செய்கின்றனர். அவனோ தயங்கியபடி
அவர்கள் அனைவரையும் உற்றுநோக்குகிறான். தனது
தாயைப்போல் தோன்றிய ஒரு பெண்ணை நோக்கிச்செல்ல,
அந்தப் பெண்ணும் அவனை எடுத்து அரவணைக்க முயல,
சட்டென்று அப்பெண் தன் தாயல்ல என்பதை உணர்ந்து,
தன்னை விடுவித்துக்கொள்கிறான்.
பின்னர், ஒவ்வொரு பெண்ணையும் உற்று நோக்கும் அந்தக்
குழந்தை அடுத்த சில நொடிகளில் தனது உண்மையான
தாயை அடையாளம் கண்டுகொள்கிறான். அதையடுத்து
அந்தத் தாய் தனது குழந்தையை அரவணைத்து மடியில்
வைத்துக்கொள்கிறார்.
குழந்தையின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் இந்த
வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி
வருகிறது.