சத்தியம் டிவி எதிரொலியாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் மாயமான விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னையில் இருந்து இரண்டு அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அதிகாரிகள் இரண்டு பேர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு மேலும் சில அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் தொடர்பு உடையதாக கிளை மேலாளர் கிருஷ்ணகுமார் உட்பட ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.