போலீஸ்காரரைக் காற்றில் பறக்கவிட்ட காளை

232
Advertisement

போலீஸ்காரரைத் தாக்கும் காளையின் வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது.

டெல்லி தயால்பூரிலுள்ள ஷெர்பூர் சௌக்கில் மார்ச் 31 ஆம் தேதி கியான் சிங் என்ற காவலர்
பணியில் இருந்தார். அப்போது சாலையோரம் கைபேசியுடன் நின்றிருந்த அந்தக் காவலரை
அங்கிருந்த காளை ஒன்று பின்னால் வந்து தூக்கியெறிந்தது.

இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவானது.

சம்பவத்தைப் பார்த்த சக அதிகாரிகள் உடனடியாக அந்தக் காவலரை மருத்துவமனைக்கு
கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பிறகு கியான் சிங் நலமடைந்து
வீடு திரும்பினார்.

டெல்லியில் தெரு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும், அந்த மாடுகளில் ஒன்றே
காவலரைத் தாக்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. தெரு மாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த
வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக டெல்லியில் வலுப்பெற்று வருகிறது.