Friday, December 27, 2024

தாலி கட்டும் முன் தண்டால் எடுத்த மணமகள்

https://www.instagram.com/reel/CRvttasqYFj/?utm_source=ig_web_copy_link

தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்துக்குமுன் மணமகள்
திருமண அலங்கார உடையுடன் தண்டால் உடற்பயிற்சி
செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது-

இந்தக் கொரோனா வைரஸ், நோய் உடல் ஆரோக்கியம்
எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.
இத்தகைய விழிப்புணர்வு, திருமணக் கோலத்தில் உள்ள
மணமகள் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டதுபோலும்.

லெஹங்கா எனப்படும் தங்களின் பாரம்பரிய உடை அணிந்துள்ள
இந்த வட இந்தியப் பெண்ணின் செய்கை அனைவரையும் திரும்பிப்
பார்க்க வைத்துள்ளது-

மணமேடையில் நடனம் ஆடுவது போன்றவற்றிலிருந்து
இந்த மணப்பெண் மாறுபட்டு உடல் ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமண உடை, கைநிறைய வளையல்கள், நெற்றிச்சுட்டி. தொங்கட்டம்,
ஆபரணங்கள் அணிந்தபடி தாலி கட்டுவதற்குத் தயாராக உள்ள நிலையில்,
இந்த மணப்பெண் உடற்பயிற்சியில் ஈடுபட்டது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துள்ளார் இந்த மணப்பெண்.

Latest news