Wednesday, December 11, 2024

வாசிக்கத் திணறிய மணமகன்…
திருமணத்தை நிறுத்திய மணமகள்

கண்ணாடி அணிந்திருந்த மாப்பிள்ளையை
சந்தேகத்தின்பேரில் விசாரித்த மணமகள்,
திருமணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார் மணப்பெண்.

நாளிதழை மணமகன் வாசிக்கத் திணறியதே இதற்குக் காரணம்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஔரய்யா மாவட்டம், ஜமால்பூர்
கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவரது மகள் அர்ச்சனா.
அதே மாநிலத்தில் பன்சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம்.
சிவம் நன்கு கல்வி கற்றவர் என்று கூறியதால் தனது மகளுக்கு
அவரைத் திருமணம் செய்ய முடிவுசெய்தார் அர்ஜுன் சிங்.

கடந்த ஆண்டு (ஜுன் 20 ஆம் தேதி, 2021) திருமணம் நடைபெற
முடிவானது. மங்கள சம்பிரதாயப்படி மணமகனுக்கு மோட்டார்
சைக்கிள் பரிசளித்து மகிழ்ந்துள்ளது மணமகள் குடும்பம்.

அதைத் தொடர்ந்து திருமணத்துக்கு முன்பாக நடைபெறும்
பாரம்பரிய ஊர்வலம் நடைபெறத் தொடங்கியது. அதேசமயம்
மணமகன் கண்ணாடி அணிவதிலேயே முழுநேரமும் ஆர்வமாக
இருந்துள்ளார்.

மணமகன் மட்டுமன்றி, மணமகன் குடும்பத்தாரும் கண்ணாடி
அணிவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கை மணமகள் குடும்பத்தினருக்கும் மணமகள்
அர்ச்சனாவுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதனால், மணமகனைக்
கண்ணாடியைக் கழற்றிவிட்டு, அவரிடம் ஹிந்தி நாளிதழ் ஒன்றைத்
தந்து வாசிக்கச் சொல்லியுள்ளார் மணமகள் அர்ச்சனா. கண்ணாடி
இல்லாமல் வாசிக்கத் திணறியுள்ளார் மணமகன் சிவம்.

இதைப்பார்த்த மணமகள் அர்ச்சனா, ”படிக்கத் தெரியாத இந்த
மாப்பிள்ளை எனக்கு வேண்டாம். இந்த மாப்பிள்ளையை நான்
திருமணம் செய்துகொள்ள மாட்டேன்”என்று மேடையைவிட்டு
வெளியே சென்றுவிட்டார்.

கண்குறைபாடு உள்ளதை மறைத்து திருமணத்துக்கு சம்மதித்த
மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது மணமகளின் தந்தை
புகார் செய்தார்.

மேலும், மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக வழங்கிய ரொக்கம்,
மோட்டார் சைக்கிளையும் திருமணச் செலவையும் திரும்பத் தந்து
விடும்படி மணமகள் வீட்டார் கேட்டுள்ளனர்.

அர்ச்சனாவின் இந்தச் செயலைக்கண்டு மகிழ்ந்த பெற்றோர்
தனது மகளின் புத்திசாலித்தனத்தைக் கண்டு மகிழ்ந்து பெருமிதம்
அடைந்ததோடு அவளின் முடிவையும் ஒருமனதோடு ஏற்றுக்
கொண்டனர். திருமணத்தையும் நிறுத்திவிட்டனர்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!