மணமேடையிலேயே மணமகனைப் பளார் என்று அறைந்த மணப்பெண்

210
Advertisement

https://www.instagram.com/reel/CTBIEQEpMhf/?utm_source=ig_web_copy_link

திருமண மேடையிலேயே தன் வருங்காலக் கணவரை
மணப்பெண் கையால் ஓங்கி அறைந்த வீடியோ சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வட இந்தியாவில் திருமணம் நடைபெறுவதற்கான
சடங்குகள் நடைபெறும் பந்தலில் மணமக்கள் அமர்ந்திருக்கின்றனர்.
அவர்களைச் சுற்றி உறவினர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

அப்போது அனைவரும் கலந்துபேசத் தொடங்குகின்றனர்.
மணப்பெண் அருகில் இருக்கும் உறவினர் ஒருவர் பேச ஆரம்பிக்கிறார்.
அதைக்கேட்டு மணமகளின் நெஞ்சம் கொதிக்கிறது. உடனே,
பதிலுக்கு ஏதோ பேசியபடி மணமகள் அவரைக் கையால் அடிக்கிறார்.

அப்படியே மணமகனை நோக்கித் திரும்பிக் கைநீட்டி ஏதோ கேட்க,
அவர் பதில்சொல்ல முடியாமல் தவிக்க, சட்டென அவரையும்
இடதுகையால் அடிக்கிறார், உதைக்கவும் எண்ணம் வருகிறது.
அதற்குள் மணமகன் தப்பிக்கும் விதமாக எழுந்துநிற்கிறார்.

எழுந்து நின்று பின்னால் நின்றிருந்த பெண்களைப் பார்க்க,
அவர்களோ ஏளனமாக அவரைப் பார்த்து சிரிக்கின்றனர். இது
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் வடிவேலு, ”என்ன சின்னப்பிள்ளத்தனமா இருக்கு”
என்று சொல்வதுபோல் உள்ளது-

ஆனால், அடிப்பதைத் தடுத்து நிறுத்த அங்கிருந்தவர்கள்
யாரும் முயற்சிசெய்யவில்லை. ஒருவேளை அடிக்கிற கைதான்
அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும் என்று விட்டுவிட்டார்கள் போலும்.

சரி எதற்காக மணமகள் அடித்தார்கள் என்று கேட்கிறீர்களா…

மணமகன் புகையிலை மெல்லும் பழக்கம் உள்ளவராம்.
அதைக் கேள்விப்பட்டுத்தான் மணமகளுக்கு இந்தக் கோபமாம்….
அதுசரி…. புருஷன பொண்டாட்டிதான திருத்தணும்….

கல்யாணத்து முன்னாடியே இந்த அடி அடிக்கிறாளே….
கல்யாணத்துக்கு அப்புறம் என்ன அடி அடிப்பா……
எந்த ஊர்க்காரியா இருப்பான்னுதானே நீங்க கேக்குறீங்க…..

உங்கள மாதிரியே எனக்கும் தெரியாது-…

புகையிலை மெல்லும் ஆண்களே ஜாக்கிரதை…