திருமணத்தில் ஆடிய மணப்பெண்,கண்ணீர் விட்ட  மணமகன்

168
Advertisement

திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் மிக முக்கியமான ஒரு நாளாகும். இதற்காக அவர்கள் பல ஏற்பாடுகளை செய்வதுண்டு. தங்கள் உடை, மண்டபத்துக்குள் வரும் விதம், நடனங்கள் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், சில சமயம், எதிர்பாராத சில விஷயங்களும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கின்றன.

மணமகன் தனது குடும்பத்துடன் திருமண மண்டபத்தை அடைந்தபோது, ​​மணமகள் அவருக்காக ஒரு நடன நிகழ்ச்சியை அர்ப்பணித்து அவரை ஆச்சரியப்படுத்தினார். மணமகள், இளஞ்சிவப்பு நிற லெஹங்காவில், ஒரு பாடலுக்கு நடனமாடுவதைக் காண முடிகின்றது. மணமகள் தனக்காக ஆடுவதைப் பார்த்த மணமகன் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்குகிறார். மணமகன் அழுவதைப் பார்த்த மணமகள் அவரது கண்ணீரை துடைத்து விடுவது மிகவும் கியூட்டாக உள்ளது.

https://www.instagram.com/reel/CaH2-j4AS94/?utm_source=ig_embed&ig_rid=b0db2872-f62e-4c31-910b-7f0eeeafbe2d

Advertisement

இந்த ஜோடியின் அழகான ரியாக்‌ஷன் சமூக ஊடகங்களில் இதயங்களைக் கவர்ந்துள்ளது. இந்த ஜோடியின் அன்பு மற்றும் காதலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இருவரும் அதிர்ஷ்டசாலிகள் என பலர் கமெண்ட் செய்துள்ளனர். இருவரின் முக பாவங்களும், செயல்களும் இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.