திருமணத்துக்குப் பறந்துவந்த மணமகள்

156
Advertisement

https://www.instagram.com/reel/CcYGU68gdwc/?utm_source=ig_web_copy_link

திருமணத்துக்கு ஹீலியம் பலூன்களில் பறந்துவந்து
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் புது மணப்பெண்.

ஒவ்வொருவரும் தங்களின் திருமணத்தை மிகச்சிறப்பான
முறையில் நிகழ்த்த விரும்புகிறார்கள். அனைவரின் கவனத்
தையும் ஈர்த்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவலை
களால் மகிழ்ச்சியில் திளைக்க விரும்புகிறார்கள். அதற்காக
வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

Advertisement

அந்த வகையில், இத்தாலி நாட்டின் ஃபுளோரன்ஸ் நகரில்
நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப் பெண் வானில்
பறந்துவந்து விருந்தினர்களை மட்டுமன்றி அனைவரின்
கவனத்தையும் ஈர்த்து மகிழ்ச்சி வானில் சிறகடித்துப்
பறந்துள்ளார்.

இளவரசிபோல் உடையணிந்துள்ள அவர் 250 ஹீலியம்
பலூன்களை ஒன்றிணைத்து அதில் அமர்ந்து மிதந்தபடி
திருமண மண்டபத்துக்குள் வந்துள்ளார்.

அவர் பறந்துவந்த இந்த அழகான பலூன்களும், அவர்
அணிந்துள்ள இளவரசிபோன்ற ஆடையும் திருமண
நிகழ்வை இன்னும் கூடுதல் மகிழ்ச்சி நிறைந்ததாக
ஆக்கியுள்ளது.

தான் ஆசைப்பட்டவாறே தனது திருமண நிகழ்வை
சிறப்பானதாக்கியுள்ளார் இந்த மணமகள்.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ
தற்போது வைரலாகிவருகிறது.