மணமகனைப் பார்த்ததும் மயங்கி விழுந்த மணமகள்

351
Advertisement

மணமகனைப் பார்த்ததும் மணப்பெண் மயங்கி விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்திலுள்ள பர்தானா பகுதியில் உள்ள உதேத்புரா கிராமத்தில் அஜய்குமார் என்னும் இளைஞருக்கும் சங்கீதா என்னும் இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன் அழகாக இருந்துள்ளார். அவரது தலைமுடியும் நன்றாக இருந்தது.

பின்னர், பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி இரவில் மணமகள் வீட்டில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. வாத்திய ஊர்வலமும் மாலைமாற்றும் சடங்கும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அந்த சமயத்தில், தான் அணிந்துள்ள பாரம்பரியத் தலைப்பாகையை மணமகன் அஜய்குமார் அடிக்கடி அடிக்கடி சரிசெய்துகொண்டிருந்ததையும், அதன்மீது கவனமாக இருந்ததையும் மணமகள் சங்கீதா கவனித்தார். அதைத்தொடர்ந்து மணமகளுக்கு சந்தேகம் எழுந்தது.

மணமகளின் சந்தேகத்தை அதிகரிக்கும் விதமாக, அங்கிருந்த பெண் ஒருத்தி மணமகன் தலையில் விக் அணிந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அந்தத் தகவலைக் கேட்ட அடுத்த விநாடியே மேடையிலேயே மணமகள் மயங்கி விழுந்துவிட்டார்.

பின்னர், சுயநினைவு திரும்பியபோது, விக் அணிந்திருந்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து மணமகன் குடும்பத்தினருக்கும் மணமகள் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணமகளின் தந்தை குறுக்கிட்டு, தலைமுடி இல்லையென்றால் முன்னரே சொல்லியிருக்க வேண்டும். இப்படி ஏமாற்றித் திருமணம் செய்தால் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் விரிசல் ஏற்படலாம் என்று தனது மகளுக்கு ஆதரவாகப் பேசினார். அதனால், திருமணம் செய்துகொள்ளாமலேயே மணமகன் வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

நாடு முழுவதும் திருமண சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் வேளையில், பல்வேறு காரணங்களுக்காக மணப்பெண்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், வழுக்கைத் தலை மாப்பிள்ளையைத் திருமணம்செய்துகொள்ள மறுத்த மணப்பெண்ணின் செயல் திரைப்படக் காட்சிகளை நினைவூட்டுதாக அமைந்துள்ளது.

அந்த மணமகளைப் பாராட்டியும் விமர்சனம் செய்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.