Saturday, July 12, 2025

ஒன்று கூடிய ‘brics’ நாடுகள்! பிரேசிலை போட்டு பொளக்கும் டிரம்ப்! காரணமே புதுசா இருக்கு!

அரசாங்க நடப்புகள், சர்வதேச உறவுகள், வர்த்தகப் போர் என அனைத்தும் ஒன்று சேர்ந்து, உலக அரசியலில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது பிரேசிலுக்கு எதிராக ஒரு அதிரடியான முடிவு எடுத்துள்ளார்.
அவர் பிரேசிலுக்கு இப்போது 50% கூடுதல் வரியை விதித்துள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால், பிரேசிலின் தற்போதைய அதிபர் சில்வாவுக்கு முன்பு இருந்த வலதுசாரிய அதிபர் போல்சனாரோ தான். அவர் மீது தேர்தல் முறையை மீறி ஆட்சியை தக்க வைத்திருக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தீவிரமாகும் போது, டிரம்ப், போல்சனாரோவுக்கு வெள்ளை அங்கி அணிவித்து, தூய்மைப்படுத்தும் வேலையை செய்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும், விசாரணையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் பிரேசில் அரசு இதனை மறுத்து, டிரம்பின் கோரிக்கையை ஏற்கவில்லை.
இதையடுத்து அமெரிக்கா, பிரேசிலுக்கு 50% கூடுதல் வரி விதித்தது.

இந்த நடவடிக்கை, டிரம்பின் முதல் முறையான அக்கப்போர் அல்ல.
இதற்கு முன்னர், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கான வழக்கிலும், அவருக்கு ஆதரவாக டிரம்ப் நம்பிக்கையுடன் நேரடியாக நடந்து இருந்தார்.
ஆனால், பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட இந்த வரி, போல்சனாரோவுக்கான ஆதரவோடு மட்டுமல்ல – இதன் பின்னணி பெரியது.

இப்போது, ​​பிரேசில் BRICS நாடுகளின் அங்கமாக இருக்கும்போது, ​​வழக்கமான அமெரிக்க டாலரை உலக வர்த்தகத்தில் பயன்படுத்தாமல், தனது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய முயற்சி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா அதற்கு எதிராக உள்ளது. BRICS நாடுகள் இதையே தங்களின் கோரிக்கையாக முன்வைத்து, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. அதனால், பிரேசிலுக்கு எதிராக இது ஒரு பெரிய சவாலை உருவாக்குகிறது

மேலும், ஈரான், பாலஸ்தீன் போன்ற நாடுகள் மீதான அமெரிக்க தாக்குதல்களை BRICS நாடுகள் எதிர்த்து நிற்கின்றன.
இதெல்லாம் அமெரிக்காவின் ஆட்சி விரிவை குறைக்கும் முயற்சிகளின் ஒரு முக்கிய பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

இதுவே அமெரிக்கா, பிரேசிலை கடுமையாக கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இருக்கிறது.
உலக அரசியலில், வர்த்தகமும் அதிகாரமும் இணைந்த மிக முக்கியமான நேரமாகவே இது பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news