சிறுவனின் விபரீதச் செயல்….. உயிரைக் காப்பாற்றிய சப்ளையர்

122
Advertisement

சரியான நேரத்தில் உணவு விநியோகம் செய்ய வந்த சப்ளையரால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள அந்த வீடியோவில், ஹோட்டலுக்குத் தனது தாயுடன் வருகிறான் ஒரு சிறுவன். தாய் சாப்பாட்டு மேஜையை நோக்கி சிறுவனை அழைத்துச்செல்கிறார்.

அப்போது ஆர்வம் மிகுதியால் அந்தக் குறும்புக்கார சிறுவன் தனது தாயைத் தள்ளிவிட்டுவிட்டு ஓடிச்சென்று அங்குள்ள ஃபிரிட்ஜைத் திறந்து ஏதோ ஒரு பொருளை எடுக்க முயற்சிசெய்கிறான்.

Advertisement

ஆனால், எதிர்பாராத விதமாக அந்தக் குளிர்சாதனப் பெட்டி சரிந்து சிறுவன்மீது விழத்தொடங்குகிறது. சில விநாடிகள் தாமதித்தால் அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்கு அடியில் சிறுவன் சிக்கி உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கும்.

என்றாலும், ஆர்டர்செய்யப்பட்ட உணவுடன் அந்த நேரத்தில் அங்குவரும் சப்ளையர், சரிந்துவிழும் ஃபிரிட்ஜைத் தாங்கி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

உணவகத்தின் சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பெற்றோருக்கு எச்சரிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

எந்த நாட்டில், எப்பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. என்றாலும், சிறுவர்களைப் பெற்றோர் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இந்த வீடியோ உணர்த்துகிறது.