குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த விநோதச் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஓர் அழகான ஆண் குழந்தைத் தலையில் பாலாடைக் கட்டியை வைத்தவுடன் உடனடியாக அழுகையை நிறுத்தியது.
பொதுவாக, அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது வெளிப்படையாக மிகவும் கடினமாக இருக்கலாம். பல நேரங்களில் எத்தனைத் தந்திரங்கள் செய்தாலும் ஒரு குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் போய்விடும்.
ஆனால், ஒரு குழந்தையின் தலையில் பாலாடைக் கட்டியை வைத்தவுடன் உடனடியாக அழுகையை நிறுத்திவிட்டதை என்னவென்று சொல்வது?
ஆன்லைனில் வெளிவந்துள்ள அந்த வீடியோவில் ஒரு தந்தை தன் குழந்தையை மடியில் வைத்துள்ளார். குழந்தையோ தொடர்ந்து உந்தி உந்தி அழுதுகொண்டிருக்கிறது. அதன் அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதைப் பார்த்த தாய் ஒரு பாலாடைக் கட்டியைக் குழந்தையின் தலையில் வைத்தார். இந்தச் செயல் குழந்தையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உடனடியாக அழுகையை நிறுத்தியதுடன் பெருங்களிப்பை வெளிப்படுத்தியது.
குறுநடை போடும் குழந்தையின் அழுகையின் செயலை நிறுத்திய தாயின் மதிநுட்பத்தைத் தாய்மார்கள் மட்டுமன்றி, அனைவரும் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.