Saturday, August 2, 2025
HTML tutorial

8856 ரன் அடித்தும் ‘இடமில்லை’ ஓய்வை அறிவித்த ’35 வயது’ வீரர்

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர். இதனால் இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால் முதல்தர கிரிக்கெட்டில் நல்ல சராசரி வைத்திருந்தும், இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து புறக்கணிப்பட்டதால், 35 வயது வீரர் Priyank Panchal ஓய்வை அறிவித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த Priyank 127 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8856 ரன்கள் குவித்துள்ளார்.

29 சதங்கள் மற்றும் 34 அரை சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில், அவரது சராசரி 45.18 ஆக உள்ளது. ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி T20 தொடர் என அனைத்திலுமே, முத்திரை பதித்த Priyank Panchalக்கு இந்திய அணியில் இடம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

இதற்கு மேலும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என, தற்போது தன்னுடைய ஓய்வு முடிவினை அறிவித்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” இவரை மாதிரி திறமையான வீரர்களுக்கு இந்திய அணியில ஏன் வாய்ப்பு கிடைக்க மாட்டுது?,” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News