அந்த நாய …..ச்ச்சூன்னு சொல்லிட்டுப் போ ராசா……

250
Advertisement

நாயைக் காலால் எட்டி உதைக்க முயன்ற இளைஞர் தடுமாறி விழுந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கைதட்டி சிரிக்கின்றனர்.

இதுதொடர்பான ஒரு வீடியோ ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோக் காட்சியில்…. டூ வீலர் அருகே அமைதியாக நின்றுகொண்டிருக்கும் ஒரு தெரு நாயை விரட்ட நினைத்த நபர், தனது காலால் எட்டி உதைக்க முயற்சிசெய்கிறார். அவர், காலை நீட்டி ஓங்கியதும் நாய் அங்கிருந்து ஓடிவிடுகிறது. அந்த நபரோ தடுமாறி கீழே விழுகிறார்.

நீ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது உன் வாய் சும்மா இருந்தாலும் நீ சும்மா இருக்க மாட்ட என்கிற வடிவேலுவின் திரைப்பட நகைச்சுவைபோல அமைந்துள்ளது இந்தக் காட்சி.

ம்ம்ம்….. நம்ம யார் வம்பு தும்புக்கும் போறதில்ல…