வேற லெவல் பட்டைய கிளப்பும் விஜயின் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ வீடியோ!

117
Advertisement

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘வாரிசு’ படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

நிகழ்ச்சி நடந்து முடிந்து, தொலைக்காட்சியில் இன்னும் ஒளிபரப்பப் படவில்லை என்றாலுமே கூட,  இரண்டு நாட்களாக சமூகவலைதளங்கள் முழுவதும் வாரிசு ஆடியோ லான்ச் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அதிலும், மேடையில் இருந்து எடுத்த Selfie வீடியோவை, என் நெஞ்சில் குடியிருக்கும் என குறிப்பிட்டு விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட் 23 மணிநேரத்தில் 3 லட்சம் லைக்குகளை பெற்றது. அது மட்டுமில்லாமல், உலகிலேயே கடந்த 24 மணிநேரத்தில் அதிகம் Retweet செய்யப்பட்ட ட்வீட்டாக இந்த ட்வீட் உள்ளது.

24 மணி நேரத்தில் அதிகம் ரிப்ளை செய்யப்பட்ட நான்காவது ட்வீட்டாகவும், அதிகம் quote செய்யப்பட்ட ட்வீட்களில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளது. ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கின் போது நெய்வேலியில் விஜய் எடுத்த Selfie வேகமாக வைரலானது போலவே, இந்த வீடியோவும் இணையத்தில் கவனம் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.