உஷாராக தப்பிய விஜய்..வசமாக சிக்கிய அஜித்..AK 62க்கு காத்திருக்கும் ஆப்பு

153
Advertisement

விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதை அடுத்து, இரு தரப்பு ரசிகர்களும் அடுத்த போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

AK 62 படத்திற்கு இயக்குநரே முடிவாகாத நிலையில், லியோ படக்குழு, படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோவிலேயே ரிலீஸ் தேதி வரை அப்டேட் கொடுத்து மிரள வைத்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்க இருந்ததாக கருதப்பட்ட AK 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

எப்படி இருந்தாலும் விரைவில் முடிவு செய்து, லியோவுக்கு tough கொடுக்கும் வகையில் டைட்டில் ப்ரோமோ வீடியோவும் தீபாவளி சமயத்தில் ரிலீஸ் தேதியும் அறிவிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம்.

தீபாவளிக்கு AK 62 ரிலீஸ் ஆகும் நிலையில், கமலின் இந்தியன் 2 மற்றும் சூர்யா 42 ஆகிய படங்களோடு போட்டி போட வேண்டி வரும்.

ஆனால், லியோ குறிவைத்துள்ள ஆயுத பூஜை விடுமுறையில், பெரிய நடிகர்களின் படங்கள் வரும் திட்டம் இதுவரை இல்லாததால், லியோ வசூல் வேட்டையில் சாதனை படைக்க இது சாதகமான சூழலாக பார்க்கப்படுகிறது.