துணிவோடு மோதும் வாரிசு! பொங்கல் Raceஇல் ஜெயிக்க போவது யார்?

169
Advertisement

பொங்கலின் போது விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியானதில் இருந்தே, இரு தரப்பு ரசிகர்களிடமும் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

எனினும், என்றைக்கு படங்கள் வெளியாகும் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து கொண்டே வந்தது.

முன்னதாக இரண்டு படங்களும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட போவதாக பேசப்பட்டு வந்தது. நேற்று முன் தினம் வெளியான வாரிசு ட்ரைலர் 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில், ‘துணிவு’ பட தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு படம் ஜனவரி 11 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஜனவரி 12ஆம் தேதியே ரிலீஸ் தேதியாக உறுதி செய்யப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா creations ஜனவரி 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜில்லா வீரம் படங்களை போல எட்டு வருடங்களுக்கு பிறகு, பொங்கல் ரேஸில் நேரடியாக களமிறங்கும் விஜய் அஜித் படங்களில், ஹிட் அடித்து வசூலை குவிக்க போவது எந்த படம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.